Map Graph

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி

ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இங்கு கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களைத் தவிர பல்சுவை கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக விளங்கிய ஜவஹர்லால் நேருவின் பெயரைக் கொண்டு விளங்குகிறது. இங்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை 78,000 பேர்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளை 130,000 பேர்களும் காண இயலும். இருக்கைகளின் அடிப்படையில் இவ்வரங்கம் இந்தியாவின் மூன்றாவது பெரும் விளையாட்டரங்கமாக விளங்குகிறது. உலகளவில் இது 51ஆவது இடத்தில் உள்ளது. இங்குதான் இந்திய ஒலிம்பிக் சங்கம் இயங்குகிறது.

Read article
படிமம்:Jawaharlal_Nehru_Stadium1.jpgபடிமம்:Commons-logo-2.svg